நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்  எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை

சிகாமட்:

சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை

சிகாமட் மாவட்ட அதிகாரி முஹம்மது எஸ்சுதீன் சனுசி இதனை கூறினார்.

இன்று காலை மாவட்டத்தில் ஏற்பட்ட 3.2 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சொத்து சேதம், காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை பெறப்படவில்லை.

சிகாமட் அருகே நிலநடுக்கத்தின் மையம் கண்டறியப்பட்டதாகவும், ஜொகூர், தெற்கு பகாங்கில் உள்ள பல பகுதிகளிலும் வசிப்பவர்களாலும் உணரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா),  பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து சிகாமட் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக நிலைமையைக் கண்காணித்து வருவதாக மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset