நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான  தேதி கிடைக்கவில்லை: தாயார்

செமினி:

சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி இன்னும் கிடைக்கவில்லை.

சம்சுலின் தாயாரான 45 வயதான உம்மு ஹைமான் பீ தௌலத்குன் இதனை கூறினார்.

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை கேடட் அதிகாரியான சம்சுல் ஹரிஸ் கடந்த மாதம்  மரணமடைந்தார்.

இரண்டாவது பிரேத பரிசோதனைக்கான  சம்சுல் ஹரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டி எடுக்க ஷாஆலம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்துள்ளது.

இருந்தாலும் இன்று காலை வரை எங்களுக்கு எந்த முன்னேற்றமும் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்பாக எனது மகனின் கல்லறையை மீண்டும் தோண்டி எடுக்கும் தேதி, நேரம் குறித்து அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இருப்பினும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அதை நிறைவேற்ற வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் டத்தோ நரன் சிங் அரா சிங் கோரியதாக அவர் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset