நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை குஸ்கோப் அதிகரிக்கும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை குஸ்கோப்  அதிகரிக்கும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு (குஸ்கோப்) துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

13ஆவது மலேசியா திட்டத்திற்கு ஏற்ப, கட்டமைக்கப்பட்ட பயிற்சி, இலக்கவியல் மாற்றம்,  நிதியுதவிக்கான அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், 

இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த அமைச்சு உறுதிபூண்டுள்ளது.

இந்த உத்தி இந்திய சமூகம் பொருளாதார நீரோட்டத்தில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதுடன்  சமூக இயக்கத்தை துரிதப்படுத்துகிறது.

மேலும் மலேசியா மடானியின் கொள்கைக்கு ஏற்ப வருமான இடைவெளியைக் குறைக்கிறது.

2025 ஆம் ஆண்டில் தேசிய தொழில்முனைவோர் நிறுவனம் (ஐன்ஸ்கென்), மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) உடன் இணைந்து மலேசிய இந்திய சமூக தொழில்முனைவோர் திட்டத்தை (மைசெப்) செயல்படுத்தும்.

இந்தத் திட்டத்தில் இன்ஸ்கேன் மூலம் தொழில்முனைவோர் பயிற்சி, வழிகாட்டுதல் வழங்குவது அடங்கும்.

அதே நேரத்தில் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்து பயிற்சி, வழிகாட்டுதல் திட்டத்தை முடித்த பங்கேற்பாளர்களுக்கு மித்ராவால் மானியங்கள் வழங்கப்படும்.

இன்று மேலவையின் கேள்வி நேரத்தில் டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset