நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அரசாங்கச் சொத்துகளைச் சேதப்படுத்தியது உட்பட 8 குற்றங்களுக்கு இனி மரணத் தண்டனை இல்லை: வியட்நாம் அரசு

ஹனோய்:

அரசாங்கச் சொத்துகளைச் சேதப்படுத்தியது உட்பட 8 குற்றங்களுக்குரிய மரணத் தண்டனையை அகற்றுவதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது.

இது ஜூலை மாதத்திலிருந்து அமலுக்கு வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்தது.

வியட்னாம் நாடாளுமன்றம் ஒருமனதாக எட்டு குற்றங்களுக்கான மரணத் தண்டையைக் குற்றவியல் சட்டத்தில் திருத்தி எழுதியதாக அதிகாரத்துவ வியட்நாம் செய்தி நிறுவனம் கூறியது. 

அவற்றுள் சொத்து அபகரிப்பு, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

அரசாங்கச் சொத்துகளைச் சேதப்படுத்தியது, போலியான மருந்துகளைத் தயாரித்தது, அமைதியைக் குலைக்க முயன்றது, போரைத் தொடங்க காரணமாக இருந்தது, வேவுப் பார்த்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களுக்காக வியட்னாமில் இனி மரணத் தண்டனை விதிக்கப்படாது.

அத்தகைய குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை இனி ஆயுள் தண்டைனையாக இருக்கும்.

பட்டியலிடப்பட்ட குற்றங்களுக்காக ஜூலை 1ஆம் தேதிக்கு முன் மரணத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தோரின் தீர்ப்புகள் ஆயுள் தண்டனையாக மாற்றப்படும்.

இருப்பினும் பத்து குற்றங்களுக்குத் தொடர்ந்து மரணத் தண்டனை விதிக்கப்படும் என்று வியட்னாம் சொன்னது.

கொலை, தேசத் துரோகம், பயங்கரவாதம், பிள்ளைகள் மீதான பாலியல் வன்கொடுமை ஆகியவை அவற்றுள் சில குற்றங்களாகும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset