
செய்திகள் உலகம்
துபாயின் மிகப்பெரிய விசா மோசடி: 21 குற்றவாளிகளுக்கு 25 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் விதித்த நீதிமன்றம்
துபாய்:
துபாயின் மிகப்பெரிய விசா மோசடி வழக்குகளில் ஒன்றில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு துபாய் குடியுரிமை மற்றும் வதிவிட நீதிமன்றம் (Citizenship and Residency Court) 25.21 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ரெசிடென்சி விசாக்களில் மக்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்தக் குழு போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால், விசாக்களைப் பெற்ற பிறகு, அவர்களின் நிலையை சட்டப்பூர்வமாக்க உதவாமல் நிறுவனங்களை மூடிவிட்டனர்.
துபாயின் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) இந்த மோசடியைக் கண்டுபிடித்து பொது வழக்குரைஞர் அலுவலகத்திற்குத் தகவல் அளித்துள்ளது.
விரிவான கண்காணிப்பு, ஆய்வுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனங்களுக்கு உண்மையான அலுவலகங்கள் இல்லை என்றும், சட்டவிரோதமாக விசாக்களைப் பெறுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மூத்த அட்வகேட் ஜெனரலும் குடியுரிமை, ரெசிடென்ஸ் வழக்குரைஞர் பிரிவின் தலைவருமான டாக்டர் அலி ஹுமைத் பின் காதெம் கூறுகையில், விசாரணையில் தவறான முகவரிகளைப் பயன்படுத்தி 385 விசாக்களை வழங்கிய 33 போலி நிறுவனங்கள் அடங்கும் என்று வெளிப்படுத்தியுள்ளார்.
அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்ட பிறகு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் 21 நபர்களையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சமூகத்தையும் வேலைச் சந்தையையும் பாதுகாக்க, குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று டாக்டர் பின் காதெம் எச்சரித்துள்ளார்.
ஆதாரம்: Khaleej
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 8:48 pm
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் ரத்து: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ
August 31, 2025, 7:25 pm
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபருக்கு அனுமதி மறுப்பு
August 31, 2025, 7:13 pm
டிரம்ப்பின் வரி விதிப்பு சட்ட விரோதம்: அமரிக்க நீதிமன்றம்
August 31, 2025, 2:34 pm
இந்தோனேசியா கலவரம்: சீனப் பயணத்தை பிரபோவோ ரத்து செய்தார்
August 29, 2025, 6:26 pm
தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் பதவி நீக்கம்: அரசிலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு
August 28, 2025, 11:28 am
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்: கொலையாளி தற்கொலை
August 27, 2025, 3:01 pm
பாகிஸ்தானுக்கு வெள்ள முன்னெச்சரிக்கையை அளித்த இந்தியா
August 25, 2025, 8:18 pm