
செய்திகள் மலேசியா
ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகள்: சையத் சாதிக்கை விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
புத்ரா ஜெயா:
ஊழல், பணமோசடி ஆகிய 4 குற்றச்சாட்டுகளிலிருந்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானை ஒருமனதாக விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Datuk Ahmad Zaidi Ibrahim தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இளைஞர் விளையாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சருமான சையத் சாதிக்கின் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை ஏற்று அவரைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க உத்தரவிடுவதாக தெரிவித்தது.
சையத் சாதிக்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றம் செய்தவர் என்பதை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதாகவும் தீர்ப்பை வாசித்த நீதிபதி Datuk Noorin Badaruddin கூறினார்.
சையத் சாடிக் குற்றவாளி என்பதைச் நிரூபிக்க தேவையான சட்டப்பூர்வ கூறுகளையும், ஆதாரங்களையும் கீழ்நிலை நீதிமன்றம் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்றும் Datuk Noorin Badaruddin தெரிவித்தார்.
அவருக்கு வழங்கப்பட்ட ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM10 மில்லியன் அபராதம், இரண்டு பிரம்படி ஆகிய அனைத்துத் தண்டைகளையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2021-ஆம் ஆன்டு ஜூலை 22-ஆம் தேதி, பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக இருந்த போது சையத் சாதிக் அக்கட்சியின் உதவி பொருளாளர் ரஃபீக் ஹக்கீம் ரஸாலியுடன் இணைந்து கட்சிக்குச் சொந்தமான RM1 மில்லியன் நிதியை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், Armada Bumi Bersatu Enterprise-க்குச் சொந்தமான Maybank Islamic Bhd வங்கிக் கணக்கில் இருந்த RM120,000 வெள்ளி ரிங்கிட்டைத் தனது லாபத்திற்காக பணத்தைத் தவறாக பயன்படுத்தியதாகக் கூறி அவர் மீது 2-ஆவது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கூடுதலாக, அவர் மீது இரண்டு பணமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. RM50,000 மதிப்புள்ள இரண்டு பரிவர்த்தனைகள் இதில் அடங்கும்.
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த இந்தப் பணம் மேபேங்க் இஸ்லாமிய பெர்ஹாட் கணக்கிலிருந்து அவரது அமானா சஹாம் பூமிபுதேரா கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 12:36 pm
மெனாரா இல்ஹாம் சொத்துரிமை வழக்கு: எம்ஏசிசி இன்று மனு தாக்கல்
June 25, 2025, 12:22 pm
வழக்குகளைக் கையாள கூடுதல் அரசு துணை வழக்கறிஞர்கள் தேவை: அசாம் பாக்கி
June 25, 2025, 10:10 am