செய்திகள் மலேசியா
MyGov Malaysia செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும்: கோபிந்த் சிங்
கோலாலம்பூர்:
MyGov Malaysia செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த சிங் டியோ தெரிவித்தார்.
இந்தச் செயலி மூலமாக, மக்கள் அரசாங்கத்தின் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவை ஒரு இலக்கவியல் நாடாக மாற்றும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தச் செயலி அறிமுகப்படுத்துவதாக கோபிந்த் தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
MyGov Malaysia செயலி முதற்கட்டமாக ஏழு முக்கியமான சேவைகளை மையமாகக் கொண்டு செயல்படும்.
கடப்பிதழ், பிறப்பு & குடியுரிமை, சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமம், சுகாதாரப் பராமரிப்பு, சம்மன்கள் வீட்டுவசதி, ரஹ்மா பண உதவி தொடர்பான அனைத்து விண்ணப்பங்களும் பொது மக்கள் இந்தச் செயலியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று கோபிந்த் குறிப்பிட்டார்.
இந்தச் செயலியில் எதிர்காலத்தில் மேலும் பல புதிய அம்சங்களும் சேவைகளும் சேர்க்கப்படும் என்றார் அவர்.
MyGov Malaysia செயலி, MyDigital ID உடன் ஒருங்கிணைக்கப்படும்.
பயனர்கள் தங்களது MyDigital ID சான்றுகளை (credentials) பயன்படுத்தி தங்களது அடையாளத்தை உறுதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜூன் 23 நிலவரப்படி, மொத்தமாக 26,04,160 MyDigital ID பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோபிந்த் சுட்டிக் காட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 10:57 am
பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தி விழாவுடன் பன்னீர் அபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களை பிரதமர் மேலும் உற்சாகப்படுத்தினார்
January 1, 2026, 1:16 am
2026 புத்தாண்டை அர்த்தமுள்ள சாத்தியமானதாக மாறுவோம்: டத்தோ சரவணக்குமார்
December 31, 2025, 5:52 pm
நாளை விடுமுறை: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு
December 31, 2025, 5:33 pm
2026ஆம் ஆண்டுக்கான தைப்பூசம், கூட்டரசுப் பிரதேச தினத்திற்கு கூடுதல் விடுமுறை
December 31, 2025, 5:26 pm
கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு
December 31, 2025, 5:17 pm
