
செய்திகள் மலேசியா
அதிக அபராத அறிக்கைகளைப் பெற்ற பேருந்து நிறுவனங்கள்: பெயர் பட்டியலை வெளியிட்டு போக்குவரத்து அமைச்சு எச்சரிக்கை
கோலாலம்பூர்:
சாலை போக்குவரத்து குற்றங்களுக்காக அதிக அபராத அறிக்கையைப் பெற்ற பேருந்து நிறுவனங்களின் பெயர் பட்டியலை போக்குவரத்து அமைச்சு வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிக அபராதங்களைப் பெற்ற பேருந்து, தளவாட நிறுவனங்களின் (லாஜிஸ்டிக்) பெயர்கள் அடிக்கடி வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தெற்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பயணம் செய்யும் Cepat Express Sdn Bhd விரைவு பேருந்து நிறுவனத்திற்கு எதிராக 540 அபராதங்கள் நிலுவையில் இருப்பதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.
இதுவரை 1000-க்கும் அதிகமான அபராத அறிக்கைகள் பெற்ற பேருந்து நிறுவனங்களைப் போக்குவரத்து அமைச்சு கண்டறிந்துள்ளதாக அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
போக்குவரத்து விதிமீறல்களில் அதிக அபராத அறிக்கைகளைப் பெற்ற லாஜிஸ்டிக் நிறுவனங்களின் பட்டியலில் KDEB Waste Management நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
KDEB Waste Management நிறுவனத்திற்கு எதிராக 22,000-க்கும் அதிகமான அபராதங்கள் நிலுவையில் இருப்பதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட மோசமான சாலை விபத்துகளைத் தொடர்ந்து, விதிமீறுநர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுப்பட்டதை அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார்.
அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டுதல், பாதுகாப்பு அம்சத்தைப் பூர்த்தி செய்ய தவறுதல், உரிமம் இல்லாமல் பேருந்து ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக அதிக அபராத அறிக்கையைப் பெற்ற பேருந்து நிறுவனங்களின் பெயர் பட்டியலைப் போக்குவரத்து அமைச்சு அவ்வப்போது வெளியிடும் என்றார் அவர்.
விரைவு பேருந்து நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தளவாட நிறுவனங்களின் (லாஜிஸ்டிக்) பெயர் பட்டியலும் வெளியிடப்படும் என்று அந்தோனி லோக் என்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பல உயிர்களைப் பறித்த பேருந்து விபத்துகளைக் குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்று பொதுமக்கள் கேட்டதைப் போக்குவரத்து அமைச்சு கருத்தில் கொண்டுள்ளதை இந்நடவடிக்கை பிரதிபலிப்பதாக அந்தோனி சுட்டிக் காட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 7:59 pm
தேர்தலிலிருந்து யாரும் வாபஸ் பெறவில்லை: வழக்கறிஞர் மதியழகன்
June 25, 2025, 12:36 pm
மெனாரா இல்ஹாம் சொத்துரிமை வழக்கு: எம்ஏசிசி இன்று மனு தாக்கல்
June 25, 2025, 12:22 pm