நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பறிமுதல் செய்யப்பட்ட 101 சொகுசு வாகனங்களில் பிரபலமான ஒரு பெண்ணுக்கு சொந்தமான போர்ஷே காரும் அடங்கும்: ஜேபிஜே

கோலாலம்பூர்:

ஜேபிஜேவால் பறிமுதல் செய்யப்பட்ட 101 சொகுசு வாகனங்களில் பிரபலமான ஒரு பெண்ணுக்கு சொந்தமான போர்ஷே காரும் அடங்கும்.

ஜேபிஜே தலைமை இயக்குநர்  டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி இதனை கூறினார்.

இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள Ops Luxury சோதனையின் கீழ் ஜேபிஜே அதிகாரிகள் 101 சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஒரு பெண் பிரபலத்திற்குச் சொந்தமான போர்ஷே காரும் அடங்கும்.

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள ஒரு இடத்தில் இந்த போர்ஷே கார்  பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் மோட்டார் வாகன உரிமம்,  காப்பீட்டுத் தொகை காலாவதியாகி விட்டது. மேலும் அக்காருக்கு பல பதிவு பெற்ற குற்றங்களும்  உள்ளன.

சாலை பயனர்களாக தங்கள் பொறுப்புகளை புறக்கணித்த சொகுசு வாகன உரிமையாளர்களுக்கு எதிரான அமலாக்கத்தை வலுப்படுத்துவதே இந்த சோதனையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த நடவடிக்கையில், மொத்தம் 101 சொகுசு வாகனங்கள் குற்றங்களைச் செய்ததாகக் கண்டறியப்பட்டது.

அவற்றில் Ferrari, Rolls-Royce, Bentley, Porsche Cayman, BMW 530E, Lotus Elise S, Toyota Alphard, Toyota Vellfire,  Mercedes-Benz ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset