நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் தொடங்கியது, நாங்கள் முடித்து வைத்துள்ளோம்; 12 நாள் போர் முடிவுக்கு வந்தது: ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான்:

இஸ்ரேலால் திணிக்கப்பட்ட 12 நாள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், ஈரான் தேசத்தின் வீரமிக்க எதிர்ப்பிற்குப் பிறகு,அதன் உறுதியான நிலைப்பாடு வரலாற்றை உருவாக்குக்கி உள்ளது.

இஸ்ரேலின் ஆத்திமூட்டும் செயல்களால் திணிக்கப்பட்ட இந்த 12 நாள் போர் முடிவுக்கு வந்துள்ளது என்றார்.

ஈரான் இஸ்ரேல் இடையே 12 நாட்களை கடந்து போர் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த போரில் ஈரானின் அணு உலைகளை அழிக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்காவும் கடந்த இரண்டு நாள் முன்பு தாக்குதுல் இணைந்தது.

தன்னுடைய பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை கடந்த திங்கள் அன்று தாக்கியது. ஈரானின் முக்கியமான அணு உலைத்தளமான போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தகர்த்தது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க ராணுவ தளங்கள் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே ஈரான் ராணுவம் நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான அல் உதெய்த் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள அமெரிக்க வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தது.

இதைப்போல ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியது. எனினும் இந்த தாக்குதல்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

அமெரிக்காவின் வான்பாதுகாப்பு அமைப்பு வானிலையே ஏவுகணை தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது.அதனை டிரம்ப் உறுதி செய்தார்.

இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் இஸ்ரேலால் திணிக்கப்பட்ட 12 நாள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset