நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹைட்டி மக்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான முயற்சி: மக்கள் அச்சம்

நியூயார்க்:
2010ஆம் ஆண்டு ஹைட்டியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பின்னர், தற்காலிக பாதுகாப்பு அனுமதியில் (TPS) அமெரிக்காவில் தங்கியிருந்த ஹைட்டி மக்கள், தற்போது நாடு கடத்தப்படுவதற்கான ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், TPS அனுமதியை 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார். இது, ஹைட்டி சமூகத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மியாமி மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ள ஹைட்டி மக்கள், அச்சத்தால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயல்துறை (ICE) அதிகாரிகள் தெருக்களில் கண்காணிப்பு மேற்கொள்வதால், மருத்துவமனைகள், வேலைத்தளங்கள், கூடவென்று தேவையற்ற பயத்தால் மக்கள் வெளியில் வர மறுக்கின்றனர்.

இந்நிலையில், பலர் கனடாவை நோக்கி செல்ல முயற்சிக்கின்றனர். 2025 முதல் பாதியில் மட்டும் 8,000-க்கும் அதிகமான ஹைட்டி அகதிகள், கனடா எல்லையை கடந்து உள்ளனர்.

ஹைட்டி நாட்டில் தற்போது வன்முறை கும்பல்கள் பல பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி, 2025 முதல் ஆறுமாதங்களில் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆட்சி இல்லை, தேர்தல்களும் கடந்த 2016க்குப் பிறகு நடைபெறவில்லை.

நாடு கடத்தப்படுவதால், வேலை, வீடு, குடும்பம் அனைத்தும் பாதிக்கப்படும் எனக் கூறும் இந்த சமூகத்தினர், “அமெரிக்காவில் வாழும் நாங்கள் ஹைட்டிக்கு திரும்பினால், எங்களை தற்கொலைக்கு அனுப்புவதைப் போல் இருக்கும்” என வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset