நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அதிபர் டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நரம்பு சம்பந்தப்பட்ட குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

79 வயது டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாய் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கெரொலைன் லவிட் கூறினார்.

அடிக்கடி கைகுலுக்குதல், இதயச் சிகிச்சைக்காக உட்கொள்ளும் மாத்திரை ஆகியவற்றால் டிரம்ப்பின் வலது கையில் நிறமாற்றம் ஏற்பட்டதாக லவிட் குறிப்பிட்டார்.

அதைத் தவிர்த்து டிரம்ப்பின் உடல் நிலை சீராகவே உள்ளது என அவரது மருத்துவர் கடிதம் வழி தெரிவித்தார்.

டிரம்ப்புக்கு அண்மையில் வலது கை, இருகால்களிலும் வீக்கம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து இணையத்தில் அவரது உடல் நிலை பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset