
செய்திகள் உலகம்
Coca-Cola பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும்: அமெரிக்க அதிபர்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Coca-Cola பானங்களில் இனி உண்மையான கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Coca-Cola அந்நிறுவனம் இதற்கு ஒப்புதல் தெரிவித்ததையும் டிரம்ப் சுட்டிக் காட்டினார்.
இந்த மாற்றத்திற்கு இணங்கிய Coca-Cola நிறுவன அதிகாரிகளுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
தற்போது Coca-Cola நிறுவனம் high-fructose corn syrup (HFCS) எனப்படும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையைப் பானங்களில் பயன்படுத்துகிறது.
இதற்கு அமெரிக்கச் சுகாதார அமைச்சர் ராபர்ட் கென்னடி பல நாள்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
1970-ஆம் ஆண்டுகளில் சோள விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அரசாங்கத் தள்ளுபடிகளால் HFCS-இன் பயன்பாடு பிரபலமானது.
HFCS-யைவிட கரும்புச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்று கூறிவிட முடியாது.
உடல் எடை, இதய ஆரோக்கியம் ஆகியவற்றின் மீது HFCS, கரும்புச் சர்க்கரை ஆகிய இரண்டின் பாதிப்பும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என ஆய்வு கூறுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 11:42 am
இஸ்ரேல்-சிரியா சண்டை நிறுத்தம்
July 18, 2025, 5:42 pm
மியன்மார் பணிப்பெண் மரணம்: போக்குவரத்துக் காவல் அதிகாரிக்கு 10 ஆண்டுச் சிறை
July 18, 2025, 4:55 pm
ஏலத்தில் 5.3 மில்லியன் டாலருக்கு விலைபோன விண் வீழ்கல்
July 18, 2025, 4:47 pm
டொனால்ட் டிரம்ப், நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
July 18, 2025, 10:23 am
அதிபர் டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு: வெள்ளை மாளிகை
July 18, 2025, 9:39 am
இங்கிலாந்து அரசு வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது
July 18, 2025, 12:11 am
இந்தோனேசியா பாணியில் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும்: டிரம்ப்
July 17, 2025, 12:14 pm
வெண்ணிலா சுவையிலான பனிக்கூழ் அழிவை நோக்கி செல்கிறது
July 17, 2025, 10:09 am