
செய்திகள் உலகம்
ஏலத்தில் 5.3 மில்லியன் டாலருக்கு விலைபோன விண் வீழ்கல்
நியூ யார்க்:
செவ்வாய்க் கோளைச் சேர்ந்த 24.5 கிலோ விண்வீழ்கல் (meteorite), சோத்பீஸ் சொகுசு ஏலத்தளத்தில் 5.3 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
‘என்டபிள்யுஏ 16788’ என்ற அந்தக் கல்லுக்கான ஏலத்தில் இணைய, கைபேசிப் பயனாளர்கள் பங்குபெற்றனர். ஏலம் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீடித்தது.
செவ்வாய் கிரகத்திலிருந்து உடைந்த அருமையான விண்வீழ்கல் இது, என்று சோத்பீஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் கெசென்டரா ஹெட்டன் தெரிவித்தார்.
நவம்பர் 2023ல் அந்தக் கல், சஹாரா பாலைவனத்திலுள்ள நைஜரின் அகாடெஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஏதோ சிறப்பு இருப்பதை அங்குள்ள மக்கள் அறிந்திருந்தனர்.
இது செவ்வாய்க் கோளைச் சேர்ந்தது என்றும், பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செவ்வாய்க்கோளின் ஆகப் பெரும் துண்டு என்றும் தெரிய வந்தது என்று கெசேண்ட்ரா கூறினார்.
கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவான இந்த வீழ்கல், பெருங்கடலுக்குப் பதிலாகப் பாலைவனத்தின்
நடுவே விழுந்தது அதிசயம். அத்தகைய கல், கண்டுபிடிக்கக்கூடிய இடத்தில், அதனை அடையாளம் காணும் வகையில் அவ்வாறு கிடைக்கப்பட்டது அற்புதமானது என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 11:42 am
இஸ்ரேல்-சிரியா சண்டை நிறுத்தம்
July 18, 2025, 5:42 pm
மியன்மார் பணிப்பெண் மரணம்: போக்குவரத்துக் காவல் அதிகாரிக்கு 10 ஆண்டுச் சிறை
July 18, 2025, 4:47 pm
டொனால்ட் டிரம்ப், நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
July 18, 2025, 10:23 am
அதிபர் டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு: வெள்ளை மாளிகை
July 18, 2025, 9:39 am
இங்கிலாந்து அரசு வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது
July 18, 2025, 12:11 am
இந்தோனேசியா பாணியில் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும்: டிரம்ப்
July 17, 2025, 4:11 pm
Coca-Cola பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும்: அமெரிக்க அதிபர்
July 17, 2025, 12:14 pm
வெண்ணிலா சுவையிலான பனிக்கூழ் அழிவை நோக்கி செல்கிறது
July 17, 2025, 10:09 am