
செய்திகள் உலகம்
இஸ்ரேல்-சிரியா சண்டை நிறுத்தம்
சுவேடா:
இஸ்ரேலும் சிரியாவும் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளதாக சிரியாவுக்கான அமெரிக்கத் தூதர் டாம் பெர்ரக் (Tom Barrack) கூறியுள்ளார்.
அண்மை சில நாள்களாக நீடித்த சண்டையில் இறங்கிய இஸ்ரேல் சிரியா மீது பெரும் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இதுபோன்ற தாக்குதலை ஈரான் மீது தொடுத்து வலிந்து போருக்கு இழுத்தது இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவின் சுவேடா (Sweida) வட்டாரத்தில் இருக்கும் Druze எனும் சமூகத்துக்கு ஆதரவாகத் தாக்குதலை நடத்தியதாக அது கூறிக் கொண்டது.
சுவேடாவில் Druze சமூகத்துக்கும் மற்ற சிறுபான்மைச் சமூகங்களுக்கும் இடையே மோதல்கள் நடக்கின்றன.
இஸ்ரேலில் Druze சமூகத்தினரைச் சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் தலைமையில் நடத்தப்பட்ட சமரசப் பேச்சில் இஸ்ரேலும் சிரியாவும் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கின.
சுவேடா (Sweida) வட்டாரத்திலிருந்து சிரியா அரசாங்கப் படை மீட்டுக்கொள்ளப்படுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.
சிறுபான்மையினர் வன்முறையை விட்டுவிட்டு சிரியாவில் ஒன்றணைந்து வாழவேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்கத் தூதர் பெர்ரக் சொன்னார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 5:42 pm
மியன்மார் பணிப்பெண் மரணம்: போக்குவரத்துக் காவல் அதிகாரிக்கு 10 ஆண்டுச் சிறை
July 18, 2025, 4:55 pm
ஏலத்தில் 5.3 மில்லியன் டாலருக்கு விலைபோன விண் வீழ்கல்
July 18, 2025, 4:47 pm
டொனால்ட் டிரம்ப், நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
July 18, 2025, 10:23 am
அதிபர் டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு: வெள்ளை மாளிகை
July 18, 2025, 9:39 am
இங்கிலாந்து அரசு வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது
July 18, 2025, 12:11 am
இந்தோனேசியா பாணியில் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும்: டிரம்ப்
July 17, 2025, 4:11 pm
Coca-Cola பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும்: அமெரிக்க அதிபர்
July 17, 2025, 12:14 pm