நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெண்ணிலா சுவையிலான பனிக்கூழ் அழிவை நோக்கி செல்கிறது

வாஷிங்டன்:

வெண்ணிலா சுவையிலான பனிக்கூழ் அழிவை நோக்கி நகர்கின்றது என்று கோஸ்டாரிகா பல்கலைக்கழகம், பெல்ஜியத்தின் KU லியூவன் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தற்போது அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்கள், காட்டு வெண்ணிலா இனங்களின் வாழ்விடங்களை மாற்றுகின்றன. 

மத்திய அமெரிக்காவில் வெப்பமண்டலப் பகுதிகள் அதிகமாக காணப்படுவதால் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகள் இனி பொருத்தமான வாழ்விடங்களைக் கண்டுபிடிக்காமல் போகலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இது, உலகளாவிய வெண்ணிலா உற்பத்தியை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

புவி வெப்பமடைவதால் பிற உணவு வகைகள் பாதிக்கப்பட்டதைப் போல வெண்ணிலா ஐஸ்க்ரீம் வகை உற்பத்திகள் அதிகம் பாதிக்கப்பட்டு வணிக ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகின்றது.

இந்நிலையில் வெண்ணிலாவின் மீள்தன்மையை மேம்படுத்துவதையும், வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு, சர்வதேச ஒத்துழைப்பு மையம் செயல்படவுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset