நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டொனால்ட் டிரம்ப், நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு 

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நரம்பு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் (வயது 79), இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் அதிபரானது முதல் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தலைப்புச் செய்தியில் இடம்பெற்று வருகிறார்.

இதுவரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களிலேயே நான்தான் மிகவும் ஆரோக்கியமான அதிபர் என்று டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட டிரம்ப்பின் கால்களில் வீக்கம் இருப்பதை போன்ற படம் இணையத்தில் வைரலானது.

மேலும் இந்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் டிரம்ப் கை குலுக்கிய புகைப்படத்தில், அவரது கைகளில் காயம் ஏற்பட்டிருந்த புகைப்படமும் பேசுபொருளானது.

இதையடுத்து, டிரம்ப்பின் உடல்நிலை குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset