நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இங்கிலாந்து அரசு வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது 

லண்டன்:

இங்கிலாந்து அரசு வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்துள்ளது.

இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் முன் வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

தற்போது அதனை அக்கட்சி தலைமையிலான அரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இதன்மூலம் ஜனநாயகத்தில் மக்கள் அதிகளவில் பங்குப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 59.7 விழுக்காடு வாக்குகளே பதிவானது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் சுமார் 7.5 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.

எனவே அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset