
செய்திகள் மலேசியா
சபா மாநிலத் தேர்தல்: தேசிய முன்னணி அதன் சின்னத்தில் போட்டியிடும்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணி சபா மாநிலத் தேர்தலில் அதன் சொந்த சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.
சொந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
எல்லா கலந்துரையாடல்களும் நேர்மறையாக இருக்க வேண்டும்.
எல்லாருக்கும் எல்லா விஷயத்திலும் ஒத்துழைக்க தயாராக இருக்கக்கூடாது என்றும் ஒரே நேரத்தில், யாரையும் முற்றிலுமாக தவிர்க்கவும் கூடாது என்றும் ஜாஹித் குறிப்பிட்டார்.
தேசிய முன்னணி சொந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் மற்ற அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து செயல்படுவதைத் தனது கட்சி உறுதி செய்யும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 12:36 pm
மெனாரா இல்ஹாம் சொத்துரிமை வழக்கு: எம்ஏசிசி இன்று மனு தாக்கல்
June 25, 2025, 12:22 pm
வழக்குகளைக் கையாள கூடுதல் அரசு துணை வழக்கறிஞர்கள் தேவை: அசாம் பாக்கி
June 25, 2025, 10:59 am