நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் காட்டுமிராண்டித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழப்பு

காசா: 

ஈரானுடன் இஸ்​ரேல் போரிட்டு வரும் நிலை​யிலும் காசா​வில் இஸ்ரேல் இராணுவம் மனிதாபிமானமற்ற முறையில் தாக்​குதலை தொடர்​கிறது.

இந்​நிலை​யில் மத்​திய காசா​வின் சலா அல்​-​தின் சாலை​யில் உணவுப் பொருளுக்​காக காத்​திருந்த நூற்​றுக்​கணக்​கான அப்பாவி பாலஸ்​தீனர்​கள் மீது இஸ்​ரேலிப் படைகளும் டிரோன்​களும் நேற்று தாக்​குதல் நடத்​தி​ய​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.
 
இதுகுறித்து நுசேரத் அகதி​கள் முகாமில் அமைந்​துள்ள அவ்தா மருத்​து​வ​மனை அதி​காரி​கள் கூறும்​போது, “உணவுப் பொருள் லாரி​களை பாலஸ்​தீனர்​கள் நெருங்​கிச் சென்​ற​போது இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இந்த தாக்​குதலில் 25 பேர் இறந்​தனர். 146 பேர் காயம் அடைந்​தனர். 

இவர்​களில் 62 பேர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் உள்​ளனர். இவர்​கள் காசா​வில் உள்ள பிற மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்" என்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset