நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முன்கூட்டியே தகவல் சொல்லி தாக்கிய ஈரானுக்கு நன்றி: டொனால்ட் டிரம்ப்

தோஹா:

ஈரான் கத்தாரில் உள்ள அல் உதேய்த் (Al Udeid) அமெரிக்க ஆகாயப் படைத்தளத்தின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தியதுள்ளது.

சனிக்கிழமை அமெரிக்கா தனது அணுச்சக்தித் தளங்கள் மீது நடத்திய தாக்குலுக்குப் பதிலடி அந்தத் தாக்குதல் என்றது ஈரான்.

"நாங்கள் யாரையும் தாக்கவில்லை. பிறர் எங்களைத் தாக்குவதையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டோம்," என்று ஈரானின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியும் (Ayatollah Ali Khamenei) கூறினார்.

தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல் சொன்னதற்காக ஈரானுக்கு நன்றி கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தாக்குதல் மிகப் பெரிய இழப்பை எங்களுக்கு உண்டாக்கவில்லை. மிக பலவீனமானது என்றார்.

கத்தார் குடிமக்களோ அமெரிக்கர்களோ இந்தத் தாக்குதலில் உயிரிழக்கவில்லை என்றார் அவர்.

அமெரிக்கா வழிநடத்தும் அல் உதேய்த் படைத்தளத்தில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகக் கூறிய கத்தார், ஈரானின் தாக்குதல் அப்பட்டமான அத்துமீறல் என்றது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset