
செய்திகள் உலகம்
துபாய் விமானங்களை ரத்து செய்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர்:
துபாய் விமானப் பயணங்களை நாளை மறுநாள் (25 ஜூன்) வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரத்துச் செய்துள்ளது.
மத்திய கிழக்கு வட்டாரத்தின் பதற்றநிலையைக் கருத்தில்கொண்டு அந்த முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் சொன்னது.
மொத்தம் 6 பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள பயணிகளைத் தொடர்புகொள்ளவிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சொன்னது.
பயணிகள் பணத்தைத் திரும்ப பெற விண்ணப்பிக்கலாம் அல்லது மாற்று விமான ஏற்பாடு செய்யப்படுவதற்குக் காத்திருக்கலாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமென்றாலும் நிலைமை மாறலாம் என்பதால் மேலும் சில விமானப் பயணங்களும் பாதிக்கப்படலாம் என்று அது சொன்னது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏற்கெனவே நேற்று (22 ஜூன்) வளைகுடா நாடுகளுக்கான விமானப் பயணங்கள் ரத்துச் செய்தது.
இஸ்ரேல் - ஈரான் பூசலில் அமெரிக்காவும் இறங்கியதை அடுத்து, உலகெங்கும் உள்ள விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கைத் தவிர்க்க முற்படுகின்றன.
ஈரானின் அணுச்சக்தித் தளங்களை அமெரிக்கா தாக்கியதால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களை எந்த நேரத்திலும் ஈரான் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm