நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அணு ஆயுதமில்லா காலி கிடங்குகளை தாக்கிவிட்டு பொய் சொல்லும் ட்ரம்ப்: சர்வதேச ஊடகங்கள் பரிகாசம் 

வாஷிங்டன்: 

ஈரானின் அணு ஆயுத நிலையங்களை முற்றிலும் தகர்த்துவிட்டோம் என தன் சோஷியல் மீடியாவான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதே சமயம், அணு ஆயுத நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோ யுரேனியத்தை ஈரான் வேறு இடத்துக்கு மாற்றி இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதை செயற்கைக்கோள் புகைப்படங்களும் உறுதி செய்திருக்கின்றன.

காலி இடத்தை தாக்கிவிட்டு அணு ஆயுத நிலையங்களை தகர்த்துவிட்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று சர்வதேச ஊடகங்கள் பரிகாசம் செய்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘வெற்றி வெற்றி’ என சொல்லிக்கொண்டிருந்தாலும், அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளரான பீட் ஹெக்செத்தும், துணை தலைவரான டேன் கெய்னும் பட்டும் படாமல்தான் இந்த விஷயம் குறித்து பேசி வருகின்றனர். மூன்று அணு நிலையங்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்று மட்டுமே செய்தியாளர் சந்திப்பில் அடக்கமாக பேசியிருக்கிறார்கள்.

ஈரான் மிகவும் ஆபத்தான யுரேனியத்தை குவித்து வைத்திருப்பது ஃபோர்டோ அணு நிலையத்தில்தான். இந்த இடத்தில் தான் 30000 பவுண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

அமெரிக்கா. ஃபோர்டோ அணு நிலையம் கடுமையான பாதிப்படைந்திருந்தாலும் முழுமையாக நிர்மூலம் அடைந்துவிடவில்லை என தெரியவந்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset