
செய்திகள் உலகம்
ஹார்மோஸ் நீரிணை மூடல்: ஈரானுக்கு ரூபியோ கண்டனம்
வாஷிங்டன்:
முக்கிய கப்பல் போக்குவரத்து வழியான ஹார்மோஸ் நீரிணையை மூடும் ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைச் சீர்குலைக்கும் வகையிலான இந்த முடிவுக்கு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது ஈரான் அரசு மேற்கொள்ளும் தவறான முடிவு என்று ரூபியோ கூறினார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில் பெரிய பங்கேற்பை குறிக்கும் வகையில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்திய 24 மணி நேரத்திற்குள் ரூபியோவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான சுமார் 55 கிலோமீட்டர் அகலமுள்ள முக்கிய கப்பல் போக்குவரத்தை மூடுவது தவறான செயலாகும் என்று ரூபியோ தெரிவித்தார்.
மற்ற நாடுகளின் பொருளாதாரங்களை மிக மோசமாக பாதிக்கும் என்று ரூபியோ கூறினார்.
இது ஒரு பெரிய அளவிலான போராட்டமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு நாங்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm