
செய்திகள் உலகம்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயர்வு
வாஷிங்டன்:
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடிரென புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் மேற்காசியிலிருந்து கிடைக்கப் பெறும் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஒரு கலன் Brent கச்சா எண்ணெய் விலை 5.7 விழுக்காடு உயர்ந்து 81.40 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யட்டுள்ளது.
இது கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும்.
இதே நேரத்தில், வெஸ்ட் டெக்ஸஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் 4 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்து ஒரு கலன் 75.98 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.
Fordow, Natanz மற்றும் Isfahan ஆகிய ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து இந்தக் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியது.
இதன் விளைவாக, உலகத்தின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய கடல்வழி வழித்தடமான ஹார்மூஸ் நீர்வழியை ஈரான் மூடலாம் என்ற பயம் நிலவுகிறது.
இந்தக் கடல்வழி மூடப்பட்டால் கச்சா எண்ணெய் விலை 120–130 USD வரை உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
இதனால், உலகளாவிய பணவீக்கம் (inflation) ஏற்படலாம்.
மேலும், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும், குறிப்பாக ஆசியாவின் முக்கிய எரிசக்தி இறக்குமதி நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm