நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: அமெரிக்கர்களுக்கு உலகளாவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வாஷிங்டன்: 

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் வெளிநாட்டிற்குச் செல்லும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். 

அமெரிக்காவின் உள்துறை செயலகம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் பயண தடங்களும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வான்போக்குவரத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளதை அத்துறை குறிப்பிட்டது. 

ஈரானின் அனுசக்தி நிலையங்களை அமெரிக்கா இராணுவம் தாக்கியுள்ள நிலையில் அமெரிக்கர்களுக்க்கு எதிராக போராட்டங்கள் உலகளவில் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகளின் இராணுவ கூடங்களை ஈரான் தாக்கும் என்று அந்நாட்டு இராணுவம் ஞாயிற்றுகிழமை பகிரங்க எச்சரிக்கையை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset