நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிரியா தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

டமாஸ்கஸ்:

சிரியா நாட்டின் தலைநகரில் உள்ள தேவாலயத்தில் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 15 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

மார் எலியாஸ் என்பவர் தேவாலயத்திற்குள் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அங்கிருந்த ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். உள்ளூர் ஊடக தகவல்களின் படி, 15 பேர் உயிரிழந்த நிலையில் இதில் குழந்தைகளும் இறந்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியாளர்களும், அவசர உதவிக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் சிரியாவில் நிகழ்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

சிரியா அதிபர் அஹ்மத் அல்-ஷாரா நாடு தழுவிய கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

இதற்கு மத்தியில் அங்கு தீவிரவாத அமைப்புகள் மீண்டும் தலைதூக்கக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன. இத்தகய சூழலில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset