நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சவுதி அரேபியாவிலிருந்து இந்தோனேசியாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

மேடான்:

சவுதி அரேபியாவிலிருந்து இந்தோனேசியாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அது திசைதிருப்பப்பட்டது.

ஒரு வாரத்தில் இடம்பெறும் இரண்டாவது அத்தகைய சம்பவம் அது.
ஜித்தா   நகரிலிருந்து புறப்பட்ட சவுதி ஏர்லைன்ஸ் விமானம் SV5688 இந்தோனேசியாவின் சுராபாயா (Surabaya) நகரில் தரையிறங்கி இருக்க வேண்டும். 

அந்த விமானத்தில் புனித ஹஜ் யாத்ரீகர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

 ஆனால் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் அது உடனடியாக  மேடான் (Medan) நகருக்குத் திருப்பப்பட்டது.

மேடன் நகரின் Kualanamu அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தை அதிகாரிகள் முழுமையாக சோதித்துப் பார்த்தனர். வெடிகுண்டு அகற்றும் பிரிவும் விமானத்தைச் சோதித்துப் பார்த்தது. சந்தேகத்திற்கிடமான எந்த வெடிபொருளும் சிக்கவில்லை. இது வேண்டுமென்றே கிளப்பப்பட்ட புரளி என்று தெரிய வந்தது.

அந்த விமானத்தில் 376 பயணிகளும் 13 சிப்பந்திகளும் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம்: Arab News

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset