நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

311 எஸ்பிஎம் மாணவர்களுக்கு 143,000 ரிங்கிட் மதிப்பிலான ஊக்கத் தொகை: டத்தோஸ்ரீ ரமணன் வழங்கினார்

சுங்கைபூலோ:

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற மொத்தம் 311 சிறந்த மாணவர்கள் 143,000 ரிங்கிட் ஊக்கத் தொகையைப் பெற்றனர்.

இந்த ஊக்கத்தொகையை பேங்க் ரக்யாட் அறவாரியத்துடன் இணைந்து தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு வழங்கியதாக அதன் துணையமைச்சர்  டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாணவர்களை எதிர்காலத்தில் மேலும் வெற்றிபெற ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

குறிப்பாக சுங்கை பூலோ  நாடாளுமன்றத் தொகுதி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் பேங்க் ரக்யாட் அறவாரியம் வழங்கிய உறுதியான, அசைக்க முடியாத ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

இந்த உன்னதமான முயற்சியின் மூலம் நாட்டின் கல்வித் தரத்தை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்த முடியும்.

மேலும், இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வேன் என டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

முன்னதாக பண்டார் சுஙகை பூலோ இடைநிலைப்பள்ளி,  புக்கிட் காடிங் இடைநிலைப்பள்ளி, புக்கிட் ரஹ்மான் புத்ரா இடைநிலைப்பள்ளி, சவுஜானா உத்தாமா இடைநிலைப்பள்ளி, சுபாங் இடைநிலைப்பள்ளி, சுபாங் பிஸ்தாரி இடைநிலைப்பள்ளி, கோத்தா டாமன்சாரா செக்க்ஷன் 10 இடைநிலைப்பள்ளி  ஆகிய 11 இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள் இன்று காலை  ஊக்கத் தொகையைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேங்க் ரக்யாட் தலைவரும் அறவாரியத்தின் வாரியக் குழு உறுப்பினருமான டத்தோ முஹம்மத் இர்வான் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு, அவர்கள் தொடர்ந்து கல்வியில் வெற்றிபெறுவதற்கு உந்து சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முஹம்மத் இர்வான் கூறினார்.

அதே சமயம், சிறந்த தேர்ச்சி அடைவதற்கான உத்வேகத்தைத் தொடர்ந்து பேணுவதற்கும், நாட்டின் மனித மூலதனத்தை அதிகரிப்பதற்கும் இந்த ஊக்குவிப்பு நிதி அவர்களின் உணர்வை வலுப்படுத்தும்.

பேங்க் ரக்யாட் அறவாரியம் வெறும் உதவி வழங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் பெற்ற வெற்றிக்கு அங்கீகாரம் அளிக்கிறது என்பதற்கு இந்த முயற்சி சான்றாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset