நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு 

டோக்கியோ: 

ஜப்பானில் கடந்த மாதம் அடிப்படைப் பணவீக்கம் 3.7 விழுக்காடாகப் பதிவாகியிருக்கிறது.

அடுத்த மாதம் பொதுத்தேர்தல் வரும் நேரத்தில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் (Shigeru Ishiba) தலைமைக்கு விலைவாசி உயர்வு மிரட்டலாக அமையும் என்று கருதப்படுகிறது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்துவிட்டது.

அரசாங்கம் நெருக்கடிக்காகச் சேமிக்கப்பட்ட இருப்பில் இருந்து அரிசியை வெளியே கொண்டுவந்தும் அரிசியின் விலை உயர்வைத் தடுக்க முடியவில்லை.

விலைவாசி உயர்வினால் விரக்தி அடைந்திருக்கும் மக்கள் பிரதமர் இஷிபாவின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset