செய்திகள் உலகம்
பேருந்து கண்ணாடியை உடைத்து, ஓட்டுநர் இருக்கையைக் கைப்பற்ற முயன்ற இளைஞர் கைது
ஹாங்காங்:
28 வயதுடைய ஒரு ஆடவர், தாம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறிக்கொண்டு, இரட்டை மாடி பேருந்தைக் கைப்பற்ற முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நார்த் பாயிண்ட், பகுதியில் இடம்பெற்றது.
மாலை சுமார் 6.45 மணியளவில், பேருந்தின் மேல்தளத்தில் இருந்த பயணி ஒருவர், ஒரு நபர் அவசர சுத்தியைக் கொண்டு பின்புற வலது கண்ணாடியை உடைத்ததாக ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி, பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்டார்.
ஆனால் சேதமடைந்த கண்ணாடியை பார்வையிடும் வேளையில், சந்தேகநபர் திடீரென ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கைபிரேக்கை விடுவித்தார். இதனால் பேருந்து பின்நோக்கி சென்று பின்னால் நின்றிருந்த மற்றொரு பேருந்துடன் மோதியது.
பின்னர் அவர் மேல்தள ஜன்னல் வழியாக குதித்து வெளியேறினார். தப்பிச் செல்ல முயற்சி செய்யாத நிலையில், அருகிலிருந்த வங்கி முன்பாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்படும் போது, அவர் தெளிவற்ற முறையில் பேசியதுடன், மன உளைச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளவரைப் போல இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது கைகளில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும், தாம் எய்ட்ஸ் நோயாளி எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
