செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் பணி ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் பணி ஓய்வு பெறும் வயது 64-ஆக உயர்த்தப்படுவதுடன், ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வேலை செய்யும் வயது வரம்பு 69-ஆக உயர்த்தப்படும். இந்த மாற்றம் வரும் ஜூலை 1 முதல் அமலில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் மூலம் 2030க்குள் ஓய்வு வயதை 65 ஆக்கவும் ஓய்வுப்பெற்றவர்கள் மீண்டும் வேலை செய்யும் வயதை 70 ஆகவும் உயர்த்தும் இலக்கை நோக்கி சிங்கப்பூர் சென்று கொண்டிருக்கிறது என்று மனிதவள அமைச்சர் டாக்டர் தான் சீ லெங் கூறியுள்ளார்.
“இந்த நடவடிக்கை எங்கள் மூத்த குடிமக்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையும் நம்பிக்கையும் அளிப்பதுடன், அனுபவமிக்க பணியாளர்களைப் பணியில் வைத்திருக்க நிறுவனங்களுக்கு உதவுகிறது,” என்றார் அவர்.
இந்த மாற்றத்துடன் இணைந்து, ஊழியர்களின் மத்திய சேம நிதி (CPF) சேமிப்பை மேலும் ஒரு ஆண்டுக்கு, டிசம்பர் 2027 வரை அரசு நீட்டிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டில் முதலாளிகள் செலுத்தும் CPF பங்களிப்பில் ஏற்படும் உயர்வில் 50 சதவீதத்தை அரசு ஏற்கும் என்றும், மூத்த பணியாளர்களுக்கான அதிகரித்த CPF பங்களிப்பு காரணமாக வணிகச் செலவுகள் உயர்வதைக் குறைக்க தற்காலிக ஊதிய ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“2027 முதல் 55 முதல் 60 வயதுக்கிடையிலான மூத்த பணியாளர்களின் CPF பங்களிப்பு விகிதம் 1.5 சதவீத புள்ளிகளால் உயர்த்தப்படும். 60 முதல் 65 வயதுக்கிடையிலானவர்களின் விகிதம் ஒரு சதவீத புள்ளியால் உயர்த்தப்படும்.
“இதன் மூலம், 2018-இல் அமைக்கப்பட்ட மூத்த பணியாளர்களுக்கான மூவரணி பணிக்குழு பரிந்துரைத்த இலக்கு CPF பங்களிப்பு விகிதத்தைச் சிங்கப்பூர் அடைந்துள்ளது,” என்றார் அவர்.
2026 இறுதியில், 2027-க்கு பிறகான குழுக்களுக்கான புதிய ஓய்வு தொகை குறித்து அரசு அறிவிக்கும் என்றும் இதனால் உறுப்பினர்கள் முன்கூட்டியே திட்டமிட முடியும் என்றும் அவர் விளக்கினார்.
இதற்கிடையில், மூத்த மனிதவள அமைச்சர் கோ போ கோன், இந்த மாற்றம் சட்ட வரம்பை நிர்ணயிப்பதை விட முக்கியமானது என்று மனிதவளத் துறை மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.
“இது மூத்த குடிமக்களுக்குத் தொடர்ந்து வேலை செய்யும் நம்பிக்கையையும், நிறுவனங்களுக்கு அனுபவமிக்க பணியாளர்களைத் தக்கவைக்கவும் திட்டமிடவும் உறுதியை வழங்குகிறது,” என்றார் அவர்.
“வேலை செய்ய விரும்பும் தகுதியுள்ள 10 பேரில் 9 பேருக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
“கடந்த ஐந்து ஆண்டுகளில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொழிலாளர் பங்கேற்பு சுமார் 58 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
“50 வயதினரிடையே இது 79 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக உயர்ந்துள்ளது,” என்றார் அவர்.
மேலும், மூத்த பணியாளர் வேலைவாய்ப்பு கடன் திட்டம் (Senior Employment Credit Scheme) டிசம்பர் 2027 வரை நீட்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் ஓய்வு வயது, மீண்டும் வேலை செய்யும் வயது உயர்விற்கு நிறுவனங்கள் தங்களை ஏற்படுத்திக்கொள்ள அரசு ஊதிய ஆதரவு வழங்க உதவும் என்றார் அவர்.
“அதிக வயது பிரிவில் உள்ள பணியாளர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும்.
“மூத்த பணியாளர்களுக்கு ஏற்ற பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்க நிறுவனங்களுக்கு உதவ, பகுதி நேர மறுவேலை மானியமும் டிசம்பர் 2027 வரை நீட்டிக்கப்படும்,” என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 4:15 pm
மஷாத்தின் சொந்த ஊரான ஷியா கல்லறையில் கமெனி அடக்கம் செய்யப்படுவார்
March 4, 2026, 2:43 pm
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
March 4, 2026, 2:19 pm
பயணிகளின் தங்குமிட, உணவுச் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்: ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவிப்பு
March 4, 2026, 12:58 pm
பேருந்து கண்ணாடியை உடைத்து, ஓட்டுநர் இருக்கையைக் கைப்பற்ற முயன்ற இளைஞர் கைது
March 4, 2026, 11:02 am
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு; அணு மையம் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
March 4, 2026, 10:14 am
முன்தாக்குதலா? முன்னெச்சரிக்கையா? ; அமெரிக்க தீர்மானத்தின் பின்னணி குறித்து கேள்விகள்
March 3, 2026, 11:32 pm
ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்
March 3, 2026, 10:38 pm
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
March 3, 2026, 10:19 pm
