நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா

புது டெல்லி:

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காலனி ஆதிக்க மொழியான ஆங்கிலத்தை கைவிட்டு, நமது பிராந்திய மொழிகளில் இந்தியர்கள் பேசி அதில் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கித் தலை குனியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தால் மட்டும் தான் அதை சாதிக்க முடியும். நமது கலாசாரம், மொழி ஆகியவை ஆபரணங்கள் போன்றவை. மொழியை பாதுகாக்காமல் நம்மால் உண்மையான இந்தியனாக இருக்க முடியாது என்றார் அமித் ஷா.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset