நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்கா தூதரகத்திற்கு முன் 200 பேர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர் 

கோலாலம்பூர்: 

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அமெரிக்க தூதரகத்திற்கு முன் 200 பேர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். 

பாலஸ்தீன மக்கள், ஈரான் நாட்டு மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராகவும் இந்த அமைதியான பேரணி நடைபெற்றது. 

அமானா கட்சியின் தகவல் பிரிவு இயக்குநர் காலிட் சாமாட், பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைஷான் கயாட் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மத்திய கிழக்கில் கடுமையான போர் நடைபெற்று வருவதால் அதனை உடனடியாக நிறுத்தவும் அமெரிக்கா தூதரகத்திடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்படவிருந்தது. 

இருப்பினும், அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் யாவும் மகஜரைப் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset