நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மருத்துவமனையை நாங்கள் தாக்கவில்லை; இஸ்ரேல் பொய் சொல்கிறது; மோதலில் அமெரிக்கா தலையிட்டால் அதற்குரிய விலை கொடுக்க நேரிடும்: ஈரான் எச்சரிக்கையுடன் விளக்கம்

தெஹ்ரான்:

‘இஸ்ரேலின் ராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம். இஸ்ரேல் மருத்துவமனையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை. இஸ்ரேல் பொய் சொல்கிறது’ ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல் மோதலின் 7-வது நாளான இன்று (ஜூன் 19) காலையில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை சேதமடைந்தது. 47 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் கூறிக் கொள்கிறது. இது அப்பட்டமான பொய். டெல் அவிவ் நகரில் பங்குச் சந்தை கட்டிடம் அமைந்துள்ள பகுதியில்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
 
ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ வெளியிட்டுள்ள செய்தியில், “இஸ்ரேலில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எங்கள் இலக்கு இஸ்ரேல் ராணுவத் தளம், உளவுப் பிரிவு தளம் மட்டுமே. அவை கவ்-யாம் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ளன. அந்தப் பூங்காவுக்கு அருகே தான் சொரோகா மருத்துவமனை உள்ளது. நாங்கள் நடத்திய தாக்குதலின் அதிர்வலைகளால் ஏற்பட்ட பாதிப்புதான் மருத்துவமனையில் உணரப்பட்டதே தவிர, எங்களின் இலக்கு மருத்துவமனை அல்ல” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலையிட்டால்.. - மருத்துவமனை தாக்குதல் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதில், ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா தலையிட்டால் அனைத்து விதமான வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
 
“ஸயோனிஸ்டுகளிக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் ஈரான் தனது தேசிய நலனுக்காக, பாதுகாப்புக்காக, அடக்குமுறையை ஏவுபவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக சில உத்திகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். எங்கள் ராணுவ தாக்குதல் உத்தி பற்றி முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ள அதிகாரிகள் அனைத்து சாத்தியக் கூறுகளையும் பிரயோகப்படுத்துவது பற்றி பரிசீலிப்பார்கள்” என்று ஈரான் வெளியுறவு இணை அமைச்சர் காசம் கரிபாபடி எச்சரித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset