நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

மியன்மார் நெருக்கடியில் ஆசியான் மௌனம் காப்பது சரியல்ல: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

மியான்மாரில் மோசமடைந்து வரும் நெருக்கடி நிலையைஆசியான் அமைப்பு கண்டு கொள்ளாமல் இருப்பது வெட்கக் கேடானது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அங்கு நிலைமை தீவிரமடைவதற்குள் ஆசியான் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அன்வார் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மியான்மார் ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடு என்பதால் நெருக்கடி நிலைக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது தான் சரியான நடவடிக்கை என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். 
 
அதை விடுத்து இந்த விவகாரத்தில் மற்ற ஆசியான் உறுப்பு நாடுகள் மௌனம் காப்பது சரியல்ல என்று பிரதமர் குறிப்பிட்டார். 

ஐரோப்பா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளின் உதவிகளை வரவேற்றாலும் இது ஆசியான் அமைப்பின் கடமை என்று 38-ஆவது ஆசிய-பசிபிக் வட்டமேசை கூட்டத்தின் கேள்வி-பதில் அமர்வின் போது பிரதமர் அன்வார் இவ்வாறு கூறினார்.

மியன்மாரில் நிலவும் தாக்குதல் மற்றும் அரசியல் நெருக்கடி,
இப்போது அந்த நாட்டின் எல்லைக்குள் மட்டும் நிகழவில்லை.

மாறாக, மியான்மாரில் ஏற்பட்ட நெருக்கடி தாக்குதல் தாய்லாந்து, மலேசியா உட்பட பல அண்டை நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்த நெருக்கடிக்காலத்தில் மியான்மாரிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 2 லட்சம் பேர்,தற்போது மலேசியாவில் தங்கியுள்ளார்கள் என்றும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset