
செய்திகள் உலகம்
பாகிஸ்தான் ராணுவ தளபதி எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்: ஈரானுக்கு எதிராக டிரம்ப் விடுக்கும் ஆணைக்கு அடிபணியாதே என்று முழக்கமிட்ட இம்ரான் கட்சி ஆதரவாளர்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு, இம்ரான் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ராணுவ தளபதியாக அசிம் முனிருக்கு சமீபத்தில் ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் தோல்வியை மறைப்பதற்காக இந்த பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 5 நாள் அரசு முறைப் பயணமாக அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க ராணுவத்தின் 250-வது விழா கொண்டாட்டத்துக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை வெள்ளை மாளிகை மறுத்தது. ராணுவ உறவுகள் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாக். ராணுவ தளபதி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்க ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் வாஷிங்டனில் பாக்கிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் தங்கியிருந்த ஓட்டலை, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். ஜெனரல் ஆசிம் முனிருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
‘‘பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்காக போராடும் மக்களை கொல்லும் அராஜக கொலையாளி. உங்களை போன்ற நபர்களால் வெட்கக்கேடு’ என கோஷமிட்டனர்.
ஈரானுக்கு எதிராக டிரம்ப் விடுக்கும் ஆணைக்கு அடிபணியாதே என்று அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm