நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிக்டாக் செயலிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் கால அவகாசத்தை நீட்டித்தார்

வாஷிங்டன்: 

டிக்டாக் செயலிக்கு கூடுதலாக 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த கால அவகாசத்தை வழங்கி உத்தரவிட்டார். 

சீனா நாட்டை சேராத விற்பனையாளரைத் தேடுவதற்கும் முறையான கலந்தாலோசனை நடத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. 

இதற்கு முன், அமெரிக்காவின் பாதுகாப்பு நலன் கருதி உலகின் பிரபலமான டிக்டாக் செயலியை தடை விதிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. 

இருப்பினும், அமெரிக்காவில் டிக்டாக் செயலி செயல்பட வேண்டுமென்றால் அது சீனா நாட்டை சேராத ஒரு நிறுவனம் வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் சீனா நாட்டை சேராத ஒரு விற்பனையாளர் டிக்டாக் செயலியை வாங்க வேண்டும். அதற்கு டிக்டாக் நிறுவனம் அந்த விற்பனையாளரை தேட தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அமெரிக்காவில் செயல்படும் டிக்டாக் செயலியின் பங்குகளை ஒரேக்கல் நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் அதிபர் டிரம்ப்பிற்கு நெருக்கமான நிறுவனமாகும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset