நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உணவுக்காக காத்திருந்த பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்: 59 பேர் உயிரிழந்தனர் 

காஸா:

காஸாவில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியக் கவச வாகனங்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 59 பேர் மாண்டனர். 221 பேர் காயமுற்றனர்.

கான் யூனிஸில் அந்தச் சம்பவம் நடந்தது.

லாரிகளில் உணவு வரும் பாதையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது இஸ்ரேலியக் கவச வாகனங்கள் இரு முறை சுட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இஸ்ரேலியத் தற்காப்புப் படை அந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
 
காஸாவில் மாண்டோரின் எண்ணிக்கை 55,000ஐ நெருங்குகிறது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset