நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியா - கனடா நாடுகளின் உறவுகளைப் புதுப்பிக்க மோடி- கார்னே சந்திப்பு

ஒட்டாவா: 

இந்தியா - கனடா ஆகிய இரு நாடுகளின் அரச தந்திர உறவினைப் புதுப்பிக்க அதன் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். 

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இந்தியா- கனடா நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த புதிய சந்திப்பு இரு நாட்டிற்கும் புதிய தொடக்கமாக அமையலாம் என்று சொல்லப்படுகிறது. 

கனடா நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 உச்சநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னே சந்தித்து கொண்டனர். 

இருவரும் கை குலுக்கிக்கொண்டதோடு அவர்களின் உரையாடல் சுமூகமான முறையில் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில் இந்தியாவுக்கான கனடா நாட்டு அதிகாரிகள் புதியவர்களை நியமிக்க மார்க் கார்னே இணக்கம் தெரிவித்துள்ளதாக கார்னேவின் அலுவலகம் தெரிவித்தது. 

உலக வர்த்தக உற்பத்தி சங்கலியின் முக்கிய நாடாக திகழும் இந்தியா, ஜி7 அமைப்பின் உறுப்பு நாடு அல்ல. மாறாக, மார்க் கார்னே அழைப்பின் பேரில் இந்தியா கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset