நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

"இஸ்ரேலிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்": சீனக் குடிமக்களை எச்சரித்த தூதரகம்

டெல் அவிவ்:

இஸ்ரேலில் இருக்கும் சீனத் தூதரகம் அதன் குடிமக்களைக் கூடியவிரைவில் நாட்டை விட்டு வெளியேறும்படிக் கேட்டுக்கொண்டுள்ளது.

வான்வெளி மார்க்கங்கள் மூடப்பட்டிருப்பதால் தரைவழியாக வெளியேறும்படி சீனக் குடிமக்களை அது கேட்டுக்கொண்டது.

நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவதாக அது எச்சரித்தது.

அதன் குடிமக்களுக்கு அனுப்பிய அறிக்கையில் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாகவும் கட்டமைப்பு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

அது போன்ற அறிவுரையை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகியவையும் வெளியிட்டுள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset