
செய்திகள் உலகம்
இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ மையத்தை தாக்கி அழித்த ஈரான்
தெஹ்ரான்:
டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் (Mossad) மையத்தைத் தாக்கி அழித்துள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே 5-வது நாளாக அதிகரித்து வரும் வான்வழிப் போருக்கு மத்தியில், நேற்று நள்ளிரவில் டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் மையத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதுகுறித்த அறிக்கையில், "இஸ்ரேலின் சியோனிச ஆட்சி ராணுவத்தின் ராணுவ புலனாய்வு மையமான அமானையும், டெல் அவிவில் உள்ள சியோனிச ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கை திட்டமிடல் மையமான மொசாட்டையும் தாக்கி அழித்தோம். அது தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது" என்று கூறியது.
இன்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், டெல் அவிவ், ஜெருசலேம் ஆகிய நகரங்களின் மீது பலத்த குண்டுமழை சத்தம் கேட்டதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. மேலும், ஈரானிய ஏவுகணைகள் வருவது குறித்து இஸ்ரேல் ராணுவம் இரவு முழுவதும் எச்சரித்தது.
"சிறிது நேரத்துக்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் பறந்து வருவதாக இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன. ஏவுகணை அச்சுறுத்தலை அகற்ற, தேவையான இடங்களில் அவற்றை இடைமறித்து தாக்குவதற்கு செயல்பட்டு வருகிறோம்" என்று ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm