நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விமானம் விழுந்து உயிரிழந்த மருத்துவ மாணவர்களுக்கு தலா ரூ. 1 கோடி அறிவித்த UAE மருத்துவர்

துபை: 

அகமதாபாதில் பிஜே மருத்துவக் கல்லூரி மீது  ஏர் இந்தியா விமானம் விழுந்ததில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா  ரூ.1 கோடி என மொத்தம் ரூ.6 கோடி வழங்கப்படும் என UAE இல் வசிக்கும் இந்திய மருத்துவரான ஷம்ஷீர் வயலில் அறிவித்தார்.

விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி, படுகாயமடைந்த 5 மாணவர்களுக்கு தலா ரூ.20 லட்சமும், உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எதற்காக இதை செய்ததாக அவர் கூறுகையில், விமானம் விழுந்து நொறுங்கிய விடுதி, உணவுக் கூடம் தொடர்பான காட்சியை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அது என்னை மிகவும் பாதித்தது.

நான் படித்தபோது தங்கி இருந்த மங்களூரு கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி, சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆகியவை என் நினைவுக்கு வந்தன.

விமானம் விபத்துக்குள்ளாகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நாம் யாரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத வகையில் அவர்களது வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

ஆகவே என்னால் இயன்ற நிதியுதவியை அளிக்க முன்வந்துள்ளேன் என்றார் அவர்.
மங்களூரில் 2010ம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் இவர் நிதியுதவி அளித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset