
செய்திகள் இந்தியா
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
புது டெல்லி:
நாய் பாபு என்ற பெயரில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ், நாயின் பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு பிகாரில் வழங்கப்பட்டுள்ளது.
பிகாரில் மக்களின் குடியுரிமை கேட்டு ஆதார், குடும்ப அட்டையை அடையாள சான்றிதழாக ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவரும்நிலையில், நாய்க்கு குடியரிமை வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாட்னா அருகே உள்ள மசவுரியில், ஒரு நாய்க்கு வழங்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் வைரலாகி வருகிறது.
அந்த சான்றிதழில், தந்தை பெயர் குட்டா பாபு, தாய் குட்டியா தேவி, புகைப்படம் என்ற இடத்தில் நாயின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. வீட்டு முகவரியும் இடம்பெற்றுள்ளது.
இந்த சான்றிதழில், வருவாய்த் துறை அதிகாரியின் டிஜிட்டல் கையெழுத்தும் உள்ளது. இந்த இருப்பிடச் சான்றிதழ் உண்மையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாய் பெற்றிருக்கும் இருப்பிடச் சான்றிதழை, குடியுரிமைக்கான சான்றாக ஏற்று வாக்காளர் அட்டை வழங்கப்படும்.
ஆனால், குடும்ப அட்டையும் ஆதார் அட்டையும் போலி என்று அரசு நிராகரிக்குமா என்று இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் கண்டனம்
இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், அந்த நாய் வாக்காளராக வந்து பாஜகவுக்கு வாக்களிக்கும். அவர்கள் நாய் பாபுவை ஒருவேளை வேட்பாளராகக்கூட ஆக்குவார்கள். இது பாஜக, தேர்தல் முறையை மோசமாகக் கையாள்வதற்கு அப்பட்டமான உதாரணம் என்று தெரிவித்துள்ளது.
நாய் பாபுவுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, அந்த சான்றிதழை பிகார் அரசு ரத்து செய்வதாக அறிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 10:57 am
கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்
July 29, 2025, 10:21 am