நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்

ஜம்மு:  

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  பாகிஸ்தானின் தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்விச்செலவை காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி ஏற்றுக்கொள்கிறார்.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு  காஷ்மீர் எல்லையில் 41 பொது மக்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா  கூறுகையில், பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தானின் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல் நேரில் சந்தித்திருந்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் பள்ளி செல்லும் சிறார்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டார்.

தற்போதுவரை  பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 22 சிறார்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்தச் சிறார்களின் கல்விச் செலவுக்காக நான் நிதியுதவியை வழங்குவேன் என்று வாக்களித்திருந்தேன். அதனை இப்போது நிறைவேற்றுகிறேன் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset