நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்

புது தில்லி: 

பஹல்காமில் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் மக்களவையில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா வலியுறுத்தினார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர்,
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பிரதமரின், மத்திய உள்துறை அமைச்சரின், பாதுகாப்புத் துறை அமைச்சரின், தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கடமையாகும்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது எந்தவித பாதுகாப்பும் போடப்படாதது ஏன்?

இது ஒன்றிய அரசின், உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வி.

ஒன்றிய உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்து வரும் நிலையில், மணிப்பூர் பற்றி எரிந்தது. தில்லி கலவரங்கள் நிகழ்ந்தன. தற்போது பஹல்காம் தாக்குதல்.  கடந்த 2020ம் ஆண்டுக்குப் பிறகு 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் அவர் பதவிவிலக வேண்டும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset