செய்திகள் இந்தியா
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
புது டெல்லி:
இந்தியா தொடங்கிய ஆபரேசன் சிந்தூரை அமெரிக்க அதிபர் டிரம்பர் நிறுத்தினாரா என்று எதிர்க்கட்சிகள் கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
இதில் மூன்றாம் நபர் தலையீட்டில் போர் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், போர் நடைபெற்ற போது பிரதமர் மோடியுன் டிரம்ப் பேசவில்லை என்று அமைச்ர் ஜெய்சங்கரும் தெரிவித்தனர்.
வர்த்தகத்தை முன்வைத்து இரு நாடுகளுக்கு இடையேயான சண்டையை நிறுத்தியதாக டிரம்பர் 26 முறை கூறியது இந்திய நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது.
காங்கிரஸ் எம்.பி., கௌரவ் கோகேய் பேசுகையில், பயங்கரவாதிகள் எப்படி பெஹல்காமிற்கு வந்தார்கள் என்பது பற்றி நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்த அவையில் சொல்லவே இல்லை.
பஹல்காம் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
திமுக எம்பி வெங்கடேசன் பேசுகையில், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் சவூதி பயணத்தில் இருந்து பாதியில் திரும்பிய பிரதமர் மோடி, பஹல்காமுக்கு செல்லாமல் பிகார் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
டிரம்ப்பின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து பிரதமர் மோடி இதுவரை ஒரு முறைகூட எக்ஸ் பக்கத்தில் பதிவிடவில்லை என்று திரிணமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி தெரிவித்தார்.
மேலும், டிரம்ப் முன்பு மோடி சென்றால் அவரது 56 இன்ச் மார்பு 32 இன்சாக குறைந்துவிடுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 5:29 pm
ஆந்திராவில் பரபரப்பு: காதலிக்கு எச்.ஐ.வி. பரப்பிய காதலன் கைது
March 18, 2026, 5:27 pm
திருநங்கை சட்டத்திருத்ததில் கடும் சர்ச்சை: மசோதாவிற்கு எதிராக பலர் எதிர்ப்பு
March 18, 2026, 4:48 pm
டாக்டர் வந்தனா கொலை வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட்டது
March 18, 2026, 3:05 pm
பில்லி சூனியம் அதிர்ச்சி சம்பவம்: மூடநம்பிக்கைக்குப் பலியான 3 உயிர்கள்
March 18, 2026, 2:43 pm
சிலிண்டர்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்திய அரசு எச்சரிக்கை
March 16, 2026, 1:02 pm
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: குறைந்தது 10 நோயாளிகள் உயிரிழப்பு
March 16, 2026, 12:09 pm
தூதரகப் பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி: ஈரானைக் கடந்து தாயகம் திரும்பும் இந்தியக் கப்பல்கள்
March 15, 2026, 4:47 pm
