நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா-பாக். இடையிலான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பொய் சொல்கிறார் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு தைரியம் உண்டா?: ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: ​

பாகிஸ்​தானுக்கு எதி​ரான போரை தான் நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிவரும் நிலை​யில், அவர் பொய் பேசுகிறார் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு தைரி​யம் உண்டா என ராகுல் கேள்வி எழுப்பினார்.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை குறித்து நாடாளு​மன்​றத்​தில் நேற்று நடை​பெற்ற விவாதத்​தின்​போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: பாகிஸ்​தானுக்கு எதி​ரான ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது எதிர்க்​கட்​சிகள் பாறை போல உறு​தி​யாக நின்று மத்​திய அரசுக்கு ஆதரவை வழங்​கின.
 
குறிப்​பாக, இந்த நடவடிக்கை தொடங்​கு​வதற்கு முன்​பாகவே அரசை ஆதரிப்​ப​தாக எதிர்க்​கட்​சிகள் ஒற்​றுமை​யாக நின்று உறுதியளித்​ததை நினை​வு​கூர விரும்​பு​கிறேன். அதே​நேரம், பஹல்​காமில் பாகிஸ்​தா​னால் திட்​ட​மிடப்​பட்ட மிரு​கத்​தன​மான தாக்குதலுக்கு கண்​டனத்​தை​யும் தெரிவித்தோம்.

ஆனால், ராணுவ நடவடிக்​கைக்கு முன்பே பாகிஸ்​தான் அரசிடம் தகவல் தெரிவிக்​கப்​பட்​டது என்​பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது இந்த விவ​காரத்​தில் பல கேள்வி​களை எழுப்புகிறது. போர் தொடங்கும்வரை பாகிஸ்தான் மட்டும்தான் எதிரி என இந்தியா நினைத்தது. ஆனால, போர் தொடங்கிய பிறகுதான் இந்தியாவின் உண்மையான எதிரி சீனா என்று தெரிந்தது. போர் தொடர்பான பல முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா அளித்து உதவியது.

இந்​தி​யா​வில் தீவிர​வாதத்தை கட்​ட​விழ்த்​து​விட்ட பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனிருடன் உணவருந்​தி​யது பற்றி ட்ரம்​பிடம் பிரதமர் மோடி ஏன் கேள்வி எழுப்​ப​வில்​லை. 

உலக நாடு​கள் ஏன் அதை கண்​டிக்​க​வில்​லை. இந்​தி​யா​வை​யும், பாகிஸ்​தானை​யும் ஒரே நிலை​யில்​வைத்​து​தான் உலக நாடு​கள் பார்க்​கின்றன.

இந்​தி​யா-​பாகிஸ்​தான் போரை தான் மத்​தி​யஸ்​தம் செய்து தடுத்​த​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 29 முறை கூறி​யுள்​ளார்.
 
அவர் ஒரு பொய்​யர் என்று கூற இந்​திரா காந்​தி​யைப் போல பிரதமர் மோடிக்கு தைரி​யம் உண்​டா? அப்​படி தைரி​யம் இருந்​தால் பிரதமர் இங்​கிருந்து (நா​டாளு​மன்​றத்​தில்) சொல்​லட்​டும். ராணுவ நடவடிக்​கைகள் உட்பட சீனா வழங்​கிய தகவல்​களின் அடிப்​படை​யில்​தான் பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​தி​யது. மீண்டும் ஒரு​முறை பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​தி​னால் இந்​தியா என்ன செய்யப்​போகிறது?.

சீனா​வும் பாகிஸ்​தானும் இணைந்​திருப்​பது இந்​தி​யா​வுக்கு மிக​வும் ஆபத்​தானது. தீவிர​வாதத்தை ஊக்​குவிக்​கும் பாகிஸ்​தானன், அதற்கு உதவும் சீனா​வின் வெளி​யுறவு கொள்​கை​யில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி அரசு தோல்​வி அடைந்​து​விட்​டது. இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்​ காந்​தி பேசி​னார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset