நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு

புது டெல்லி: 

இனவாத கலவரம் மூண்டுள்ள மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மெய்தேயி, குகி - ஜோ குழுவினர் இடையிலான இனவாத வன்முறையால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது.

இதில் இருதரப்பிலும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதைக் கட்டுப்படுத்த முடியாததால் பாஜக முதல்வர் பிரைன் சிங் ராஜிநாமா செய்தார்.

அங்கு பிப்ரவரி 13 ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்டடது.

மணிப்பூரில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று  காங்கிரஸ் எம்.பி. பிமோல் வலியுறுத்தினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset