நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வந்த ஏர் இந்தியாவின் மற்றொரு விமானத்தின் எஞ்சினில் பழுது

கொல்கத்தா: 

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. 

விமானத்தின் 2 எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். விமானத்தில் பழுது ஏற்பட்ட நிலையில் பத்திரமாக கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்தது. 

நள்ளிரவு 12.45க்கு கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது. 

எஞ்சின் பழுதால் அதிகாலை 5.20 மணி அளவில் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குமாறு விமானி அறிவுறுத்தினார்.

நேற்று ஏர் இந்தியா போயிங் 787-8 Dreamliner விமானத்தில்  கோளாறு ஏற்பட்டதால் அது ஹாங்காங்கிற்கு திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது. 

ஹாங்காங்கிலிருந்து புது டில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் ஹாங்காங் திரும்பியது. 

மீண்டும் மற்றொரு விமானத்தில் பழுது ஏற்பட்டதால் பயணிகள் பதற்றமடைந்தனர். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset